திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (16:42 IST)

எல்லோருக்கும் மோசமான நாள் வரும் – கேதார் ஜாதவ்வுக்கு ஆதரவாக தமிழ் சினிமா நடிகர்!

கேதார் ஜாதவ் விஷயத்தில் சென்னை அணி ரசிகர்கள் எல்லை மீறுவதாக நடிகர் சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் மிகவும் பரிதாபகரமான தோல்வியை அடைந்தது. இத்தனைக்கும் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்து சென்றனர். ஆனால் 12 ஆவது ஓவரில் இருந்து 15 ஓவர் வரை சுனில் நரேனின் பந்துவீச்சு போட்டியையே மாற்றியது.

தோல்விக்கு மிக முக்கியமானக் காரணமாக சொல்லப்படுவது கேதார் ஜாதவ்வின் டெஸ்ட் இன்னிங்ஸ்தான். இக்கட்டான நேரத்தில் இறங்கி ரன்களை சேர்க்க வேண்டிய நேரத்தில் அவர் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள் அவரைக் கண்டபடி திட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இன்னும் ஒரு சிலரோ கேதார் ஜாதவ் மிகவும் மோசமாக விளையாடியதால் மோசமாக விளையாடிய தோனி (12 பந்துகளில் 11 ரன்கள்) ரசிகர்களின் விமர்சனங்களில் இருந்து தப்பிவிட்டார் என கருத்து தெரிவிக்கின்றனர். இதையடுத்து சமூகவலைதளங்கள் முழுவதும் கேதார் ஜாதவ் டிரோல்களும் மீம்ஸ்களுமாக பரவி வருகின்றன. மேலும் கேதார் ஜாதவ்வை அணியில் இருந்து நீக்கவேண்டும் என ஆன்லைனில் பெட்டிஷன் எல்லாம் உருவாக்கியுள்ளார்கள்.

இந்நிலையில் நடிகரான சாந்தனு பாக்யராஜ் கேதார் ஜாதவ்வுக்கு ஆதரவாக ‘நாம் அனைவரும் தீவிரமான சென்னை அணி ரசிகர்கள். ஆனால் கேதார் விஷயத்தில் எல்லை மீறி சென்றுள்ளோம். ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் மோசமான நாட்கள் மைதானத்தில் அமைந்தே தீரும். ண்டிப்பாக ஜாதவ்வும் சிஎஸ்கேவும் மீண்டு வருவார்கள் என உறுதியாகச் சொல்வேன். இதற்காக மனு போடுவது எல்லாம் மிகவும் தவறானது. சில போட்டிகள் ஓய்வுக்குப் பின் அவர் மீண்டும் திரும்பி வருவார் என நம்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.