1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 15 ஜூன் 2024 (11:03 IST)

டி20 போட்டியில் உகாண்டா அணி படுதோல்வி.! ஐந்தே ஓவரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து..!!

Cricket
டி20 உலகக் கோப்பை தொடரின் 32வது லீக் போட்டியில் உகாண்டா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
 
டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 32வது லீக் போட்டியில், நியூசிலாந்து, உகாண்டா அணிகள் மோதின. டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். 
 
அதன்படி முதலில் களமிறங்கிய உகாண்டா அணி, நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 18.4 ஓவர்களில் 40 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டுகளையும், போல்ட், ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 
 
இதனையடுத்து, 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 5.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  நியூசிலாந்து ப்போட்டியில் வெற்றி பெற்றாலும் சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும் தகுதியை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.