செவ்வாய், 18 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 15 ஜூன் 2024 (07:27 IST)

இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் ரத்து… என்ன காரணம் தெரியுமா?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவின் நாசாவ் மைதானத்தில் 8 போட்டிகள் வரை நடத்தப்பட்டன. ஆனால் இந்த மைதானத்தின் தன்மை மிகவும் மோசமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் ரன்களே சேர்க்க முடியாத இக்கட்டுக்கு ஆளாகினர். இதில் மூன்று போட்டிகளை விளையாடிய இந்தியா மூன்றிலுமே ரன்கள் சேர்க்க தடுமாறியது.

இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று கனடா அணியை எதிர்த்து தங்கள் கடைசி லீக் போட்டியை விளையாடுகிறது.

ஆனால் போட்டி நடக்கும் புளோரிடா மைதானத்தில் மழை பெய்து வருவதால் நேற்று இந்திய அணி கலந்துகொள்ள இருந்த பயிற்சி ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் இன்றைய போட்டி நடக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.