வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஜூலை 2024 (13:03 IST)

அடிச்ச சிக்ஸரில் உடைந்த மேற்கூரை! அதிர்ஷ்டவசமாக தப்பிய ரசிகர்கள்! - ENG vs WI டெஸ்ட்டில் பரபரப்பு!

Eng vs WI

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் சமர் ஜோசப் அடித்த சிக்ஸரில் மைதான மேற்கூரை உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 416 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஓலி போப் 121 ரன்களும், பென் டக்கெட் 71 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களும் எடுத்திருந்தனர்.

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 457 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக கவேம் ஹாட்ஜ் 120 ரன்களை குவித்திருந்தார். அலிக் அத்தனாஸ், டி சில்வா தலா 82 ரன்கள் அடித்தனர்.
 

இந்த போட்டியில் கடைசியாக இறங்கிய சமர் ஜோசப் 27 பந்துகளில் 33 ரன்களை அடித்து டெஸ்ட் மேட்ச்சில் ஒரு டி20 விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது 107வது ஓவரில் கஸ் அட்கின்ஸன் வீசிய பந்தை ஷமார் ஜோசப் அடித்து நொறுக்கினார். அந்த பந்து மிக உயரமாக சென்று சிக்ஸர் ஆனது. அப்போது மைதானத்தின் மேல் இருந்த ஓடுகளில் வேகமாக பந்து மோதியதில் ஓடுகள் சிதறி கீழே இருந்த பார்வையாளர்கள் மீது விழுந்தது. ஆனால் நல்வாய்ப்பாக அதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சமார் ஜோசப்பின் அதிரடி சிக்ஸர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K