ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2024 (13:05 IST)

வங்கதேசத்தில் தீவிரமடையும் வன்முறை.! பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு.!!

வங்கதேசத்தில் கலவரம் நீடித்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133ஆக அதிகரித்தது. 
 
வங்கதேசத்தில் அரசு வேலையில் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து நாடு முழுவதும் மாணவ அமைப்பினர், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து தற்போது வன்முறையாக மாறியது. இதனால் வங்கதேசத்தில்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, இணையச் சேவை நிறுத்தப்பட்டுள்ளன.
 
இந்த விவகாரம் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் மாணவர் அமைப்பினர் மறுத்துவிட்ட நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர் போராட்டங்கள் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், கலவர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133ஆக அதிகரித்தது. இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வங்கதேசத்தில் கலவரம் நீடித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆளும் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர் போராட்டங்களால் ஆளும் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.