செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 19 ஜூன் 2021 (22:21 IST)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் : விராட் கோலி புதிய சாதனை....

இந்திய அணியின் கேப்டன்  டெஸ்ட் கிரிக்கெட்டில்  புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம் இன்று செளதாம்டனில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

தற்போது பேட்டிங் செய்து வரும் விராட் கோலி தனது அற்புதமான பேட்டிங் திறமையால் 7,500 ( 154 இன்னிங்ஸ் )  ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தனது 154 இன்னிங்ஸில் இதை அடித்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் மாஸ்டர் பேட்ஸ்மேன் என அழைக்கப்படுபவருமான சச்சின் இந்த இமாயல ரன்களை தனது 144 வது இன்னிங்ஸில் அடித்தார்.

மேலும், 7,500 ரன்களை வேகமாக எட்டிய வீரர்கள் சாதனையாளர்கள் வரிசையில் கோலி 9 வது இடம் பிடித்துள்ளார். கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.