செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (20:18 IST)

டெஸ்ட் சாம்பியன் ஷிப்… பிசிசிஐ முக்கிய அறிவிப்பு

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையியில் இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க இருந்த நிலையில் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளை ஆட்டம் தொடரும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.