சவுத்தாம்டனில் இன்று மழைக்கு எவ்வளவு வாய்ப்பு… கூகுளில் தேடும் ரசிகர்கள்!

Last Updated: சனி, 19 ஜூன் 2021 (09:03 IST)

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் இந்த போட்டி தொடங்க இருந்த நிலையில் மழைக் காரணமாக முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து 23 ஆம் தேதி இறுதிநாளாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்றாவது போட்டி தொடங்குமா அல்லது மழை குறுக்கிடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் சவுத்தாம்ப்டனில் இன்று மழைக்கு 10 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.இதில் மேலும் படிக்கவும் :