1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Team Pakistan white washed against england

சொந்த மண்ணில் வொயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்… இங்கிலாந்து அணியின் வரலாற்று சாதனை!

பாகிஸ்தான்
பாகிஸ்தானில் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளையும் வென்று இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

டெஸ்ட் போட்டி விளையாடும் அனுகுமுறையையே மாற்றியுள்ளது இங்கிலாந்து அணி. பாகிஸ்தானுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளையும் வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது.

நடந்து முடிந்த மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 304 இரண்டாவது இன்னிங்சில் 216 ரன்கள் என்று பாகிஸ்தான் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 354 ரன்கள் எடுத்ததால் அந்த அணிக்கு 167 என்ற இலக்கு வெற்றிக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி மூன்றையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி தங்கள் சொந்த மண்ணில் முதல்முறையாக வொயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையைப் படைத்துள்ளது. 
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரூ.14 கோடி.. மெஸ்ஸிக்கு குவியும் செல்வம்!