திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2022 (23:22 IST)

பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

accident
பாகிஸ்தான் நாட்டில் பனிமூட்டம் நிலவி வரும் நிலையில்,  இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராஜன்பூர் என்ற மாவட்ட  நெடுஞ்சாலை இன்று கடும் பனியால் மூடப்பட்டிருந்தது.

இது குளிர்காலம் என்பதால், காலையில் வரும் பேருந்துகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த நிலையில், இன்று காலையில், பனிமூட்டத்தால் சரியாக பாதை தெரியாததால், இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியது.

இதில், 8 பேர் பலியாகினர். 23 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.