1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suryakumar yadav debuted in three formats after 30 years

30 வயசுக்கு மேலதான் சுக்கிரன் உச்சம் போல – சூர்யகுமார் யாதவ் படைத்த வித்தியாச சாதனை!

சூர்யகுமார் யாதவ்
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் நேற்று அறிமுகமானார்.

கடந்த ஒரு வருடமாக சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட ஆட்டத்திறனில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் டி 20 போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.இப்போது டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரில் கூட சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் அவர் இப்போது ஆஸி அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகம் ஆகியுள்ளார்.

தற்போது 32 வயதாகும், சூர்யகுமார் மூன்று விதமான போட்டிகளிலும் 30 வயதுக்குப் பிறகு அறிமுகமான வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ரோஹித் சர்மா அசத்தல் சதம்.. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் விபரம்..!