செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2023 (10:01 IST)

10 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள்: ஆரம்பத்திலேயே தடுமாறும் ஆஸ்திரேலியா..!

aus
10 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள்: ஆரம்பத்திலேயே தடுமாறும் ஆஸ்திரேலியா..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாக்பூரில் பார்டர் கவாஸ்கர் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்துவிட்டது. 
 
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் காவஜா இருவரும் தலா ஒரு ரன்னில் அவுட் ஆகினார் என்பதும் ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது லாபுசாஞ்சே மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்களை இழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva