1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2023 (08:39 IST)

இன்று தொடங்குகிறது முதல் டெஸ்ட் போட்டி.. இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?

பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்க உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி ஒன்பதாம் தேதியும், இரண்டாவது பிப்ரவரி 17ஆம் தேதியும் , மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதியும் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அதனை அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று நாக்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய ஆடும் லெவன் அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் இன்று டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகக் கூடும் என சொல்லப்படுகிறது. பண்ட் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் கே எல் பரத் விக்கெட் கீப்பராக அணியில் இடம்பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.