1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suresh Raina went unsold in IPL auction

எந்த அணியுமே ஏலத்தில் எடுக்காத சுரேஷ் ரெய்னா… மிஸ்டர் ஐபிஎல்-கே இந்த நிலைமையா?

சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூண்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எந்த அணியுமே எடுக்கவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரர்களில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. கடந்த ஆண்டு அவர் மோசமாக விளையாடி கடைசி சில போட்டிகளில் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு பெஞ்சில் உட்காரவைக்கப்படார்.

அதே போல இந்த ஆண்டு ஏலத்துக்காக அவரை அணியில் இருந்து கழட்டிவிட்டது சிஎஸ்கே. இந்நிலையில் மீண்டும் சி எஸ் கே அணியே அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ளும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த அணியும் அவரை எடுக்க ஆர்வம் காட்டாததால் அன்சோல்ட்(unsold           ) பட்டியலில் வைக்கப்பட்டார். மிஸ்டர் ஐபிஎல் என்று ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் வர்ணிக்கப்பட்ட ரெய்னாவுக்கே இந்த நிலைமையா என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
புஸ்வானம் ஆன ஸ்ரேயாஸ் ஐயரின் ஏலம்…. கைப்பற்றிய கே கே ஆர்!