1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:00 IST)

தோனி எந்த டீமை எடுத்தாலும் அது நல்லாதான் இருக்கும்: சிஎஸ்கே அணி சி.இ.ஓ

தல தோனி எந்த டீம் எடுத்தாலும் அது நல்ல டீம் ஆகத்தான் இருக்கும் என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 
 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் அணிகளை ஏலம் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக தல தோனி எந்தெந்த வீரர்களை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில் ரசிகர்களுக்கு ஒன்றே ஒன்றை நான் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன் தல தோனி எந்த வருடம் டீம் எடுத்தாலும் ஏமாற்ற மாட்டார் என்றும் அந்த டீம் நிச்சயம் நல்ல தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்