செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (15:06 IST)

சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் மரணம்! – கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக பல டெஸ்ட், உலக கோப்பை தொடர்களில் விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த ரெய்னா, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார்.

சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சக கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னாவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.