1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (15:17 IST)

புஸ்வானம் ஆன ஸ்ரேயாஸ் ஐயரின் ஏலம்…. கைப்பற்றிய கே கே ஆர்!

ஸ்ரேயாஸ் ஐயர்தான் இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என சொல்லப்பட்டது.

டெல்லி அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் தலைமையில் டெல்லி அணி மிக சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனால் அடுத்த ஆண்டே கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவருக்கும் டெல்லி அணி நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

இதையடுத்து டெல்லி அணி அவரை இப்போது விடுவித்துள்ளது. இந்நிலையில் அவர்தான் இந்த ஏலத்தில் ஹாட் வீரராக இருப்பார் என சொல்லப்பட்டது. மேலும் அவரை ஏலத்தில் எடுத்து பெங்களூர் அணி கேப்டனாக நியமிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இப்படி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் யாரும் எதிர்பாராத விதமாக கே கே ஆர் அணி 11.5 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.