திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 9 ஆகஸ்ட் 2023 (08:56 IST)

மீண்டும் டி 20 அணியில் ஸ்டீவ் ஸ்மித்… முக்கியப் பொறுப்பை கொடுத்த புதுக் கேப்டன்!

தற்கால கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டராக இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் போட்டிகளில் அவர் 60க்கும் மேல் சராசரியை வைத்துள்ளார்.பிராட்மேனுக்கு அடுத்து அதிக சராசரி கொண்ட கிரிக்கெட் வீரராக உள்ளார்.

ஆனால் அவரை டி 20 போன்ற குறுகிய வடிவ போட்டிகளில் ஆஸி அணி அதிகமாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை தொடரில் அவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வைத்தனர்.

இந்நிலையில் இப்போது அவரை மீண்டும் டி 20 அணியில் எடுத்துள்ள அணி நிர்வாகம், அவரை வார்னரோடு தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாட வைக்க உள்ளது. ஆஸி டி 20 அணிக்கு மிட்செல் மார்ஷ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையைக் கணக்கில் கொண்டு இந்த மாற்றத்தை ஆஸி அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.