1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (14:22 IST)

மீண்டும் ஆர் சி பி அணிக்குள் வரும் டிவில்லியர்ஸ்… பின்னணி என்ன?

எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் ஆர் சி பி அணியின் பயிற்சியாளர்களான மைக் ஹெஸன் மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலக, இப்போது ஜிம்பாப்வேயின் ஆண்டி ப்ளவர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர் சி பி அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஆர்சிபி அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.