1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. RCB appointed New coach

ஆர்சிபி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!

ஆர் சி பி
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் ஆர் சி பி அணியின் பயிற்சியாளர்களான மைக் ஹெஸன் மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் சில வாரங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான ஆண்டி பிளவர் ஆர் சி பி அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பல்வேறு லீக் போட்டிகளில் தான் பயிற்சியாளராக பணியாற்றிய அணிகளுக்கு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
About Writer
vinoth