1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (07:51 IST)

பிரேக்கிங் பேட் புகழ் நடிகர் மார்க் மார்கோலிஸ் காலமானார்!

2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் வெளியாகி பிரபலமான சீரிஸ் பிரேக்கிங் பேட். அதன் பின்னர் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு உலகம் முழுவதும் அந்த சீரிஸ் பிரபலமானது.

தமிழ்நாட்டிலும் இந்த சீரிஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ளது. தமிழ் சினிமாவிலேயே பல இயக்குனர்கள் அந்த தொடருக்கு ரசிகர்களாக உள்ளனர். அந்த தொடரில் சாலமான்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மார்க் மார்கோலிஸ்.

அவரின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது. அதன் பின்னர் அந்த சீரிஸ் ஸ்பின் ஆஃப் சீரிஸ் பெட்டர் கால் சால் எடுத்தபோது அதிலும் அவர் நடித்தார். இந்நிலையில் இப்போது 83 வயதான நிலையில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.