1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shubman gill practicd in ahmedabad stadium

அகமதாபாத்தில் ஒருமணி நேரம் பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்!

Shubman Gill
உலகக் கோப்பையின் இந்தியாவின் முதல்  இரண்டு போட்டிகளிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என சொல்லப்படுகிறது.

காய்ச்சல் காரணமாக இந்திய அணியோடு டெல்லி செல்லாத அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தத்தில் உள்ள தட்டையணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடதாகவும் அன்று மாலையே சிகிச்சை முடிந்து அவர் ஹோட்டலுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதன் பின்னர் நேற்று முன்தினம் அகமதாபாத் திரும்பிய அவர் அங்கு சுமார் ஒருமணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சனிக்கிழமை போட்டிக்கு முன்னர் அவர் தன்னுடைய உடல்தகுதியை நிரூபித்தால் அவர் அந்த போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
வங்கதேசத்திற்கு எதிரான போட்டி. .டாஸ் வென்ற நியூசிலாந்து முதல் பந்திலேயே எடுத்த விக்கெட்..!