திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:08 IST)

“முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை…” பவுலிங் பற்றி பும்ரா கருத்து!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன் தினம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். இதுபற்றி போட்டிக்குப் பின்னர் பேசிய பும்ரா “நான் எப்போதும் முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. 4 விக்கெட்கள் எடுத்து விட்டதால் நான் சாதித்து விட்டதாக நினைக்கவில்லை. தொடர்ந்து சிறப்பாக பந்துவீச முயற்சிக்கிறேன். ஆடுகளத்தை பொறுத்து பந்துவீசுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய பும்ரா, தற்போது மீண்டும் அணியில் திரும்பி சிறப்பாக பந்துவீசி கலக்கி வருகிறார்.