1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (16:02 IST)

பும்ரா அபார பௌலிங்.. கட்டுப்படுத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் பேட்டிங்..!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், பும்ரா அபார பந்துவீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் பேட்டிங் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 
பும்ரா நான்கு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தியதோடு வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர் சற்றுமுன் வரை ஆப்கானிஸ்தான் அணி 25 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதே ரீதியில் சென்றால் 200 ரன்களுக்கு ஆப்கானிஸ்தானில் சுருண்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே ஒரு போட்டியில் விளையாடிய தோல்வி அடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் உள்ளது.

இந்தியா ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி உள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி  மூன்றாவது இடத்தை நோக்கி சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran