தொடர்புடைய செய்திகள்
- காயமடைந்து அணியில் இல்லாத போது இதைதான் நினைத்தேன்… கே எல் ராகுல் மகிழ்ச்சி!
- ஐபிஎல்க்கு தூக்கினு வாங்கடா அந்த செல்லத்தை..! – ரச்சின் ரவீந்திராவுக்கு குவியும் ரசிகர்கள்!
- ஆப்கானிஸ்தான் போட்டியிலும் சுப்மன் கில் இல்லை! – என்னதான் ஆச்சு அவருக்கு?
- ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் கோலிக்கு கன்கஷன் சோதனை!
- உலகக் கோப்பையுலும் வேலையைக் காட்டிய ஜார்வோ… ஐசிசி விதித்த ரெட் கார்ட்!
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கில் மருத்துவமனையில் அனுமதி!
உலகக் கோப்பையின் இந்தியாவின் முதல் போட்டியான ஆஸ்திரேலியா – இந்தியா ஆட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை. அடுத்த போட்டிகளுக்குள் அவர் குணமாகி வர வேண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்து நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டெல்லி சென்றுள்ள இந்திய அணியோடு செல்லாத அவர் சென்னையில் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்தார். இப்போது அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு ரத்தத்தில் உள்ள தட்டையணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்