1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:23 IST)

காயமடைந்து அணியில் இல்லாத போது இதைதான் நினைத்தேன்… கே எல் ராகுல் மகிழ்ச்சி!

கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக தொடர்ந்து அணியில் இடம்பெறாத ராகுல், ஆசியக் கோப்பை தொடரில் மறுவருகை கொடுத்தார். அது முதல் நான்காம் இடத்தில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் உலக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸி அணிக்கு எதிராக் 97 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

அப்போது பேசிய ராகுல் “நான் களத்துக்குள் வரும் போது கொஞ்ச நேரத்துக்கு டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடுவோம் எனக் கோலி கூறினார்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியது குறித்து பேசியுள்ள ராகுல் “நான் சரியாக விளையாடாத போது நிறைய விமர்சனங்கள் மற்றும் கேலிகள் வந்தன. இந்த சூழலில் தான் நான் காயமடைந்து, அணியில் இருந்து வெளியேறினேன். காயத்தில் இருந்து குணமடைந்த போது உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.