1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (18:38 IST)

ஐபிஎல்க்கு தூக்கினு வாங்கடா அந்த செல்லத்தை..! – ரச்சின் ரவீந்திராவுக்கு குவியும் ரசிகர்கள்!

Rachin Ravindra
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திராவுக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.



இந்தியாவில் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன,. டாஸ் வென்று பவுலிங் எடுத்த நெதர்லாந்து ரன்களை கட்டுப்படுத்த தவறியதால் மானாவாரியாக அடித்த நியூஸிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 322 ரன்களை குவித்துள்ளது.

இந்த போட்டியில் அதிகபட்சமாக வில் யங் 70 ரன்களையும், டால் லத்தம் 53 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 51 ரன்களயும் பெற்றனர். இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் சர்வதேச போட்டியிலேயே சதத்தை வீழ்த்திய இந்திய வம்சாவளியான ரச்சின் ரவீந்திரா இந்த போட்டியில் அரை சதம் விளாசியுள்ளார். ரச்சின் ரவீந்திராவின் ஆட்டத்திற்கு இந்தியாவிலும் ரசிகர்கள் உருவாகி வரும் நிலையில், ரச்சின் ஐபிஎல் வந்தால் சிறப்பாக இருக்கும்  என கிரிக்கெட் ரசிகர்களிடையே பேச்சு எழத் தொடங்கியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் கண்களில் மட்டுமல்லாமல் ஐபிஎல் ஓனர்கள் கண்ணிலும் அதிரடி காட்டும் இந்த இளம் வீரர் படாமல் இருந்திருக்க மாட்டார். எனவே ரச்சினை ஐபிஎல் போட்டிகளுக்கு கொண்டு வரும் வாய்ப்பும் இருக்கலாம்.

Edit by Prasanth.K