1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Jarvo banned for watching world cup 2023 in any ground

உலகக் கோப்பையுலும் வேலையைக் காட்டிய ஜார்வோ… ஐசிசி விதித்த ரெட் கார்ட்!

Jarvo 69
நேற்று சென்னையில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி மிகவும் லோ ஸ்கோர் போட்டியாக இருந்தாலும் விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. 200 ரன்களை சேஸ் செய்த இந்தியா, கோலி மற்றும் ராகுல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் போராடி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் சுவாரஸ்யமான விஷயங்களில் ஒன்றாக அமைந்தது இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல யுடியூபர் ஜார்வோ இந்திய அணியின் சீருடையை அணிந்துகொண்டு மைதானத்துக்குள் நுழைந்தது. அதன் பின்னர் அவரை மைதான காவலர்கள் வெளியே அனுப்பினார்கள்.

ஜார்வோ என்று அழைக்கப்படும் டேனியல் ஜார்விஸ் இதுபோல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மைதானங்களுக்குள் ஏற்கனவே சில முறை குழப்பங்களை உண்டாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது ஐசிசி அவரை இனிமேல் எந்தவொரு உலகக் கோப்பை போட்டியையும் பார்க்க முடியாதபடி அவருக்கு தடை விதித்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
“போட்டி முடியும் வரை ஒரே இடத்தில் நின்றேன்… கால்கள் வலிக்கின்றன” –அஸ்வினின் நம்பிக்கை!