செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (16:39 IST)

கான்பூர் முதல் டெஸ்ட்… அடும் லெவனில் ஸ்ரேயாஸ் ஐயர்!

நாளை கான்பூரில் தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என கேப்டன் ரஹானே உறுதி செய்துள்ளார்.

நாளை கான்பூரில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று கேப்டன் அஜிங்யே ரஹானே ஸ்ரேயாஸ் களமிறங்குவார் என உறுதி செய்துள்ளார். இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணியில் அறிமுகமாகவுள்ளார்.