திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:53 IST)

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- இந்திய அணி அறிவிப்பு

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே தலைமையிலான இந்திய வீரர்களை  பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதில்,. மயங்க் அகர்வால்,புஜாரா, சுப்மன் கில், ஷ்ரேயாஷ், ஜடேஜா,. அஸ்வின், அக்‌ஷர் படேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்,  சூர்யகுமார், சஹா, கே.எஸ்.பரத், ஜெயந்த், சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.