செவ்வாய், 25 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:23 IST)

ராகுலுக்காக மிடில் ஆர்டருக்கு செல்லும் சுப்மன் கில்!

இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் வரிசையில் மாற்றம் ஒன்றை செய்துள்ளனர் டிராவிட்டும் கேப்டன் ரஹானேவும்.

நாளை மறுநாள் கான்பூரில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் ராகுலுக்காக சுப்மன் கில்லை நான்காவது இடத்தில் இறக்க முடிவு செய்துள்ளனர்.

வழக்கமாக சுப்மன் கில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். ஆனால் விராட் கோலி இல்லாததால் நடுவரிசையைப் பலப்படுத்தும் விதமாக கில் நான்காவது வீரராக்கப்பட்டு கே எல் ராகுலும் மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.