ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (10:11 IST)

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இலங்கை!

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இலங்கை!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது. 
 
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நவம்பர் 21ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 386 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி சற்று முன் வரை 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் 162 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டி முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இலங்கை அணி வலுவான நிலையில் இருப்பதால் இலங்கை அணி வெற்றி பெற வாய்ப்பு அல்லது டிரா ஆக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது