வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (13:03 IST)

ஸ்ரேயாஸுக்கு மீண்டும் பிட்னெஸ் பிரச்சனை… கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பின்னடைவு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு உடலில் சிறு பிரச்சனைகள் இருந்ததால் பெங்களூருவில் இருந்த தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகள் மேற்கொண்டார்.

அங்கு அவர் உடல் தகுதி பெற்று விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலியை காரணம் காட்டி அவர் ரஞ்சி கோப்பையில் இருந்து விலகினார். ஆனால் அவர் பொய் சொல்லி ரஞ்சி கோப்பை விளையாடாமல் ஓடி ஒளிகிறார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.

இதையடுத்து பிசிசிஐ அறிவித்த வருடாந்திர ஒப்பந்தத்தில் அவர் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இதனால் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடினார். இந்நிலையில் அவருக்கு இப்போது மீண்டும் முதுகுவலி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் முழு ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாமல் போகலாம் என சொல்லப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அவர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.