வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (10:42 IST)

வீட்டில் நடந்த துயரம்… ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான பந்துகளை எதிர்கொண்டு 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதிரடியாக விளையாடிய அவர் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் ஐதராபாத் அணியால் 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஆனால் அவர் ஆரம்பத்தில் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. இதனால் சமூகவலைதளங்களில் அவர் இந்திய ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டார். அதையடுத்து இந்த சீசனில் அவர் ஐதராபாத் அணியால் கழட்டிவிடப்பட்டு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 4 கோடி ரூபாய் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் தற்போது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். அதற்குக் காரணம் அவரின் பாட்டி கடந்த மாதம் இயற்கை எய்தியதுதான் என்று தெரிவித்துள்ளார். சிறு வயதில் இருந்தே தன் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த ப்ரூக் அவரின் மறைவில் இருந்து இன்னும் மீளமுடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.