ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (17:56 IST)

இந்தியாவை வெற்றிப் பாதையில் வைத்திருக்க விரும்பினேன்! – தொடர் நாயகன் விருதை வென்ற ஜெய்ஸ்வால் நிகழ்ச்சி!

jaiswal
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ‘தொடர் நாயகன்’ விருது வழங்கப்பட்டது.



இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.  முதலில் நடந்த நான்கு போட்டிகளில் இந்தியா அணி 3-1  என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

 முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 218 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களமிறங்கிய இந்திய அணி 477 ரன்களை அடித்து வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்திருந்தது.  இந்நிலையில் இன்று நடந்த இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 195 ரன்கள் ஆல் அவுட் ஆனது. 

இதனால் இந்திய அணி அபார வெற்றி பெற்று இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த மொத்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு அதிக ரன்கள் குவித்துக் கொடுத்த இளம் வீரர் ய்சஹ்ஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது.  ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதாக குல்தீப் யாதவிற்கு பிளேயர் ஆப் தி மேட்ச் வழங்கப்பட்டுள்ளது.

 இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் தொடரில் விளையாடியது குறித்து பேசியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் “ இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை நான் மிகவும் விரும்பி விளையாடினேன்.  இந்த போட்டியில் நான் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  இந்திய அணிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை அளித்து அணியை தொடர்ந்து வெற்றிப் பாதையில் வைத்திருக்க வேண்டும் என்று மட்டும் தான் நான் எப்போதும் யோசித்தேன்“  என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.  இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு  பல முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Edit by Prasanth.K