தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவை வெற்றிப் பாதையில் வைத்திருக்க விரும்பினேன்! – தொடர் நாயகன் விருதை வென்ற ஜெய்ஸ்வால் நிகழ்ச்சி!
- சச்சின் முதல் சுப்மன் கில் வரை..! வயசானாலும் வேகம் குறையல..! – 700 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
- தந்தை மரணம்.. வீட்டில் வறுமை! சோதனைகளை தாண்டி சாதனை! – யார் இந்த ஆகாஷ் தீப்?
- India vs England Test: முதல் மேட்ச்சுலயே முரட்டு சம்பவம்..? 3 விக்கெட்டுகளை அசால்ட்டாக தூக்கிய ஆகாஷ் தீப்!
- டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு.. வெற்றியை உறுதி செய்யுமா இந்தியா?
“எங்க பொருளை எடுத்து எங்களையே போட்டாங்க”… இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் கருத்து!
இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இங்கிலாந்து அணி சமீபகாலமாக ஆக்ரோஷமாக ஆடிவரும் பாஸ்பால் அனுகுமுறைக்கு இந்திய வீரர்கள் மூடுவிழா நடத்திவிட்டதாக கருத்துகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் “நாங்கள் எப்படி விளையாட விரும்பினோமோ அப்படி இந்தியா விளையாடியது. இன்னும் சொல்லப்போனால் எங்களை தாண்டி விளையாடியது. அவர்களின் ஆட்டத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்கு பயம் வந்துவிட்டது.
நீங்கள் வெளிப்பட்டு நிற்கும் அதைவிட சிறந்ததாக மாறவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. இன்னும் கொஞ்சம் ஆழ்ந்த புரிதலும் சில மாற்றங்களும் தேவைப் படுகிறது. அடுத்த சில மாதங்களில் நாங்கள் கடுமையாக உழைத்து இப்போது இருப்பதை விட இன்னும் சிறப்பான அணியாக திரும்பி வருவோம்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்