1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 மார்ச் 2024 (09:18 IST)

இந்தியாவுக்கு வெளிய விளையாடத் தெரியுமா? சுப்மன் கில்லை சீண்டிய ஆண்டர்சன்! – இது வேற நடந்துச்சா?

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுடன் நடந்த வாக்குவாதம் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.



இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த நிலையில், அதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றியைக் கைப்பற்றியது. சமீபத்தில் நடந்த இறுதி போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. அதில் இந்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில்லுடன் நடந்த வாக்குவாதம் குறித்து சமீபத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார்.

கடைசி போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா சிறப்பாக விளையாடி வந்த நிலையில் இந்திய அணி பேட்ஸ்மேன் சுப்மன் கில் 150 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் ஜேம்ஸ் ஆணட்ர்சனின் பந்தில் விக்கெட்டை இழந்தார்.


விக்கெட் இழப்பிற்கு முன்பாக சும்பம் கில்லிடம் பேசிய ஆண்டர்சன் “இந்தியாவுக்கு வெளியே எப்போதாவது ரன் அடித்திருக்கிறீர்களா?” என கிண்டலாக கேட்டுள்ளார். இதனால் கடுப்பான சுப்மன் கில் “நீங்கள் ரிட்டயர்ட் ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டது” என பதில் அளித்துள்ளார். அடுத்த 2 பந்துகளில் சுப்மன் கில்லை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து ஆண்டர்சனே கூறியுள்ள நிலையில், அவர் வேண்டுமென்றே சுப்மன் கில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை கோபப்படுத்தும் விதமாக பேசி மனநிலையை குலைத்து அவுட் செய்துள்ளார் என இந்திய ரசிகர்கள் ஆண்டர்சனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K