புதன், 11 பிப்ரவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 25 அக்டோபர் 2025 (18:21 IST)

துரத்தும் காயம்… ஸ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனையில் அனுமதி…!

துரத்தும் காயம்… ஸ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனையில் அனுமதி…!
சிட்னியில் இன்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 236 ரன்கள் சேர்த்தது.

237 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் மூத்த வீரர்களான, ரோஹித் சர்மா (121 ரன்கள்) சதம் அடித்தார், விராட் கோலி 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி இந்த போட்டியை எளிதாக வென்றது.

இந்த போட்டியில் ஃபீல்ட் செய்த போது ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகி வருகிறது.