1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shivam dube replace nithish kumar reddy in Zimbabwe series

ஜிம்பாப்வே தொடரில் இளம் வீரருக்குப் பதில் ஷிவம் துபே உள்ளே!

சுப்மன் கில்
உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இம்மாத இறுதியில் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட, ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தற்போது இந்திய அணிக்காக உலகக் கோப்பை கிரிக்கெட் ஆடி வரும் ஷிவம் துபேவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில் அணியில் இடம்பெற்றிருந்த நிதீஷ்குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் இணைவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அணி விவரம்
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், மற்றும் துஷார் தேஷ்பாண்டே.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
Worldcup T20: வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்குமா இந்தியா? இன்று இங்கிலாந்துடன் மோதல்!