வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

அரையிறுதியில் இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? இந்த இரண்டு வீரர்கள் வேண்டாம் என கெஞ்சும் ரசிகர்கள்!

நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து நாக் அவுட் சுற்றுகள் ஆரம்பிக்க உள்ளன. இதற்காக இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று காலை நடக்கும் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும், இரவு நடக்கும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் மோதுகின்றன.

இந்நிலையில் அரையிறுதிக்கான போட்டியில் இந்திய ப்ளேயிங் லெவன் அணியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இதுவரையிலான போட்டிகளான ஷிவம் துபே மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அவர்களுக்கு பதில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இறக்கப்படலாம் என கருத்துகள் எழுந்துள்ளன. அதனால் அணியில் மாற்றத்தை செய்வாரா ரோஹித் ஷர்மா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல தொடக்க ஆட்டக்காரராக சொதப்பும் கோலி வழக்கம் போல அவரது இடத்தில் இறங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர்.