செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கயானா மைதானத்தில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்பு?

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் 8 சுற்றில் இருந்து அடுத்த கட்டத்துக்கு இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று நடந்த கடைசி சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி போராடி வங்கதேசத்தை வீழ்த்தியது.

இன்றிரவு நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டி நடக்கும் கயானா மைதானத்தில் அன்று மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

இன்று அந்த பகுதியில் மழை பெய்ய 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த போட்டிக்கான ரிசர்வ் நாள் அறிவிக்கப்படவில்லை. போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் 250 நிமிடங்கள் வரை கூடுதலாக நேரம் ஒதுக்கப்படும். அதையும் தாண்டி போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக பைனலுக்கு செல்லும்