திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (12:52 IST)

நான் சரியாக விளையாடாத போதும் என்னை தோனி ஆதரித்தார்… நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்த தவான்!

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே இடமளிக்கப்படவில்லை. அவரின் வயது மற்றும் ஃபார்ம் காரணமாக அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் அணிக்குள் வாய்ப்பளிக்கப்பட்டார்கள். அதில் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் இப்போது நிரந்தர வீரர்களாக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் தவான் தற்போது ஓய்வை அறித்துள்ளார்.

இது சம்மந்தமாக  அவர் வெளியிட்ட வீடியோவில் “இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​​​எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன என்றும் எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும், நான் அதை அடைந்தேன்.” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் தன்னுடன் விளையாடிய வீரர்கள் மற்றும் கேப்டன்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் “நான் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்பு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. ஆனால் அப்போதும் தோனி எனக்கு வாய்ப்புகளை அளித்து ஆதரவாக இருந்தார். அவருக்கு எனது நன்றியை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.