திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (23:38 IST)

IPL-202: டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!

delhi vs punjab kings
பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் -2024 -17 ஆவது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில்  சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.இதில் சென்னை சூப்பர் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து இ இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில்,  முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய அணிகள் மோதின.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய போதும் போக போக திணறியது.
 
எனவே   டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் சேர்த்தது.
 
இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது.
 
இதில், சாம் கரண் 47 பந்துகளில் 63 ரன்னும், லிவிங்ஸ்டன் 21 பந்துகளில் 38 ரன்னும், சிங் 17 பந்துகளில் 26 ரன்னும் அடித்தனர்.
 
எனவே  பஞ்சாப் அணி 19.2 ஓவரில் 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
 
டெல்லி கேப்பிடல் அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் அஹமத் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா 1 விக்கெட் கைப்பற்றினார்.