வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (07:31 IST)

லக்னோ அணிக்கு முதல் வெற்றி.. ஷிகர் தவான் அதிரடியாக விளையாடியும் பஞ்சாப் தோல்வி..!

ஐபிஎல் தொடர் போட்டியில் நேற்று லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான டீகாக் 54 ரன்கள், கேப்டன் நிகோலஸ் பூரன் 42 ரன்கள் அடித்த நிலையில் கடைசி நேரத்தில் க்ருணால் பாண்டியா அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக 70 ரன்கள் அடித்தாலும் அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே அடித்ததால் லக்னோ அணி வெற்றி பெற்றது  

இதனை அடுத்து  லக்னோ அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகள்,  டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva