திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 11 மார்ச் 2023 (08:42 IST)

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஆஸி வீரர் ஷான் மார்ஷ்!

ஆஸி அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியும், திறமையான வீரராக இருந்தும் சரியாக ஜொலிக்காமல் போன வீரர் ஷான் மார்ஷ். மிக இளம் வயதிலேயே அவருக்கு அறிமுகம் கிடைத்தாலும், தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்ட அவரால் பெரிய அளவில் சர்வதேச அணிக்காக விளையாட முடியவில்லை.

இந்நிலையில் இப்போது 40 வயதில் தன்னுடைய சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார் ஷான் மார்ஷ். டெஸ்ட் போட்டிகளில் 2,265 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2,773 ரன்களும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் முதல் சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையும் அவரைச் சாரும்.