ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (08:20 IST)

ஐசியு வில் இருந்தாலும் நலமாக இருக்கிறார்.. நடிகர் பாலா பற்றி மனைவி பகிர்ந்த தகவல்!

இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. நடிகர் பாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலா தமிழில் வீரம் உள்ளிட்ட படங்களிலும் மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் பாலா பற்றி அவரின் மனைவி எலிசபெத் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “பாலா இப்போது ஐசியுவில் இருந்தாலும், நலமாக இருக்கிறார். தான் நலமாக இருப்பதாக அனைவரிடமும் சொல்லவேண்டும் எனக் கூறினார்.  கடந்த சில ஆண்டுகளில் இதுபோல எமெர்ஜென்சி சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். இந்த முறையும் அவர் அப்படி திரும்பி வருவார் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.