திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (23:25 IST)

பிரபல நடிகர் படத்தில் இணைந்த லைலா

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் நடிகை லைலா  இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் ஆதி, சிந்துமேனன், நந்தா துரைராஜ், சரண்யா மோகன் நடிப்பில், இயக்குனர் அறிவழகன்  இயக்கத்தில் வெளியான படம் ஈரம்.

இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து, ஆதியுடன், அறிவழகன் கூட்டணியமைக்கவுள்ளார்.

இதுவும் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாகவும், இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.  இப்படத்திற்குச் சப்தம் என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வரும் நிலையி, முதற்கட்ட ஷூட்டடிங் நிறைவடைந்துள்ளது.. இந்த நிலையில், இப்படத்தில், புதிதாக  நடிகை லைலா இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.