திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (23:27 IST)

பிரபல நடிகையை 4 வதாக திருமணம் செய்துகொண்ட நடிகர் நரேஷ்

naresh -pavithra
பிரபல தெலுங்கு சினிமா நடிகரும் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் சகோதரருமான நரேஷ் நடிகை பவித்ராவை 4 வது திருமணம் செய்து கொண்டார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும் நடிகருமான நரேஷ் ஏற்கனவே 2 பெண்களைத் திருமணம் செய்து, கருத்துவேறுபாட்டால் அவர்கள் இருவரையும் விவாகர்த்து செய்திருந்தார்.

சமீபத்தில், 3 வதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால்,  நரேஷும், பவித்ராவும் ஒரு ஓட்டலில் ரகசியமாகத் தங்கியிருந்தபோது, ரம்யா ரகுதிக்கு தெரிந்து இருவரையும் செருப்பால் அடிக்கப் போனார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த   நிலையில், ரம்யா ரகுபதியை விவாகரத்து செய்ய தற்போது, நரேஷ் விண்ணப்பித்துள்ளார்.

இந்த நிலையில்,  நடிகர் நரேஷ் நடிகை பவித்ராவை முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமண வீடியோவையும் நரேஷ் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை பவித்ராவும் ஏற்கனவே 2 முறை விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.