அடி பட்ட இடத்திலேயே அடிப்போம்: வேறுமுகத்தை காட்ட போகும் ஷமி

Last Updated: புதன், 29 ஆகஸ்ட் 2018 (18:05 IST)
கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவின் இடது கை நடுவிரலில் காயம் ஏற்பட்டது. 
 
இந்நிலையில், இது குறித்து இந்திய அணி வீரர் ஷமி கூறியது பின்வருமாறு, ஒரு பேட்ஸ்மென் சிரமப்படுகிறார், ஒரு காயத்தினால் பலவீனமாக இருக்கிறார் என்றால் அதே பகுதியை குறிவைத்து வீசுவதுதான் உத்தியாக இருக்க முடியும். 
 
காயம்பட்ட இடத்தில் வீசி அவரை நிலைகுலையச் செய்வதுதான் உத்தி. நான் மட்டும் இப்படி யோசிப்பவனல்ல, உலகில் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் இப்படித்தான் யோசிப்பார்கள். எனவே நாங்களும் நிச்சயமாக ஜானி பேர்ஸ்டோவின் நடுவிரலை குறிவைத்து தாக்குவோம் என்று பேசியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :