1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஆகஸ்ட் 2018 (17:07 IST)

இந்தியாவின் முந்தைய நிலைமையில் இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இருந்த இந்திய அணியின் நிலைமை தற்போது இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் ஆகிய தொடர்கள் முடிந்து தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
 
மூன்றாவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. 
 
தற்போது இங்கிலாந்து அணி இந்திய அணியின் முந்தைய நிலைமையில் உள்ளது. இங்கிலாந்து அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் கேள்விக்குறியாகி உள்ளது.
 
இதனால் 4வது போட்டியில் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி தற்போது பெரும் பயத்தில் உள்ளது.